ட்ரெஸ்-ஐ தூக்கி அதை காட்டு என கூறினார் - முன்னணி இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..!


சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நேரும் மனம் மற்றும் உடல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரில் இதற்கென மீ டூ என்ற தனி இயக்கமே உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் இதில் தைரியமாக தங்களது புகார்களை எழுதி வருகிறார்கள். 
 
இந்நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, நான் முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்தில் எனக்கு நர்ஸ் வேடம். படப்பிடிப்பின் போது என்னை தனியாக அழைத்தார். 
 
நானும் என்ன என்று கேட்டேன். அப்போது உதவி இயக்குனர்கள் எல்லாம் வெளியில் சென்று விட்டார்கள். அப்போது நான் சல்வார் போட்டிருந்தேன். அப்போ என்னிடம் உன்னுடைய பேண்ட்-டை முட்டி வரைக்கும் தூக்கு என்றார்.. நான் ஏன் சார் என்றேன். 
 
இல்லை, நாளைக்கு சீனில் நர்ஸ் காஸ்ட்யூம் போடணும் அதுக்கு கரெக்டா இருக்குமான்னு பாக்கணும்-ல என்றார். சரி என்று நானும் ஒரு காலில் மட்டும் முட்டிவரை பேண்ட்டை தூக்கி காட்டினேன். பிறகு, இன்னொரு காலையும் முட்டி வரை தூக்க சொன்னார் சரி என்று காட்டினேன். அதன் பிறகு, இன்னும் கொஞ்சம் மேல தூக்கு என்றார். 
 

அப்போது எனக்கு புரிந்து விட்டது. இவர் வேறு என்னவே முயற்சி செய்கிறார் என்று எனக்கு தோன்றியது . அவர் ஒரு பெரிய டைரக்டர். அவரிடம் என்னால் எதிர்த்தும் பேச முடியவில்லை. என்னால் பண்ண முடியாதுன்னு சொல்வதற்கு பயமா இருந்தது. 
 
உடனே நாளைக்கு நான் வந்து நர்ஸ் ட்ரெஸ்-ஐ போட்டு காமிக்கிறேன் என்று வெளியே வந்துவிட்டேன். அதன் பிறகு அடுத்த நாள் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கே போகவில்லை என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

ட்ரெஸ்-ஐ தூக்கி அதை காட்டு என கூறினார் - முன்னணி இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..! ட்ரெஸ்-ஐ தூக்கி அதை காட்டு என கூறினார் - முன்னணி இயக்குனர் மீது நடிகை அர்ச்சனா பகீர் புகார்..! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.