"என்னமா நேத்து கோபால் கடையில வாத்து பிரியாணியா..?.." - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். 
 
சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை மட்டுமல்ல, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது. 
 
தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்திலும், விஜய் ஆண்டனியுடன் மற்றொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
 
 
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா,தர்ஷா குப்தா ஆகியோருக்கு டாப் கொடுக்கும் வகையில் ஆத்மிகா கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். 
 
 
இந்த கவர்ச்சி வலையில் எந்த இயக்குனர் தயாரிப்பாளர் மாற்றப் போகிறார் என்று தெரியவில்லை.அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கடற்கரையில் நின்றபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து வந்தாலும், குசும்பு பிடித்த சில ரசிகர்கள் அவருடைய ஒரு போஸை பார்த்து என்னமா நேத்து கோபால் கடையில வாத்து பிரியாணியா..? என்று குறும்புத்தன்மான கமெண்டுகளை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

"என்னமா நேத்து கோபால் கடையில வாத்து பிரியாணியா..?.." - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! "என்னமா நேத்து கோபால் கடையில வாத்து பிரியாணியா..?.." - ஆத்மிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.