இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..! - குவியும் லைக்குகள்..!

 
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.. இருந்தாலும் தமிழில் ஒரு நீண்ட தயக்கத்துக்கு பின்னர், கடந்த 2019ல் அசுரன் படம் மூலம் நுழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 
 
இந்தநிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்து இன்று(மார்ச் 11) வெளியாகியுள்ள 'தி பிரிஸ்ட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார். 
 
இந்தியில் அறிமுகமாகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார். 
 
வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
 
 
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 
 
 
இதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
 
 
இந்நிலையில், மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார்.


 
இன்றைய இளம் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..! - குவியும் லைக்குகள்..! இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on April 22, 2021 Rating: 5
Powered by Blogger.