விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சி மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் அனைவரின் மனதையும் கவர்ந்து ரொம்பவே பாப்புலர் ஆன நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் .
நான்கு சீசன் களை கடந்து இருந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்டவர்களை தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வைத்திருக்கின்றனர். அதிலும் அந்த சீசனில் அதிகமான மேக்கப் போடும் குறைவான ஆடையுடன் சுற்றிக் கொண்டிருந்தது ரைசா தான்.
அதனால் அவரது பெயரை சொன்னதும் உடனே டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .தூங்கி விழித்ததும் முதல் வேலையாக மேக்கப் போட்டுக்கொண்டு தான் கேமரா முன்னாடியே முகத்தை காட்டுவது இவரது வழக்கம்.
அவர் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும்போதும் எப்போதுமே அப்படித்தான் இருப்பாராம் . அதனால்தான் இவரால் அந்த வீட்டிற்குள் நடிக்கவில்லை என்னுடைய கேரக்டரில் இருக்க முடிந்தது என கூறி இருக்கிறார்.
இருந்தாலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு இவரது காட்டில் நல்ல மழைதான் . இதற்கு முன்பு இவர் முதன்முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் பிறகு பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் சிந்துஜா வாக அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துவரும் ரைசா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.
காரணம், எதோ குத்துச்சண்டை வீராங்கனை ரேஞ்சுக்கு முகமெல்லாம் வீங்கி கோரமாக இருக்கிறார்.
தவறான சிகிச்சை அளித்த பைரவி செந்தில்
அதில் அவர் கூறியுள்ளதாவது. "நேற்று மருத்துவர் பைரவி செந்தில் என்பவரிடம் எளிய முக அழகு சிகிச்சைக்காக சென்றதாகவும், அவர் நான் கேட்காத மருத்துவத்தை வற்புறுத்தி செய்ததாகவும் அதன் விளைவாக என் முகம் இப்படி ஆகி விட்டது எனவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், தற்போது போன் செய்தால் எடுக்க மாட்டேன் என்கிறார். என்னை நேரில் சந்திக்கவும் விரும்பவில்லை எனவும் நான் வெளியூருக்கு சென்று விட்டேன் என கூறுவதாகவும் பதிவிட்டுள்ளார்.



