நைட் பார்ட்டியில் நடிகர் விஜய் - அதுவும் யார் கூடன்னு பாருங்க..! - திடீர் வைரலாகும் புகைப்படம்..!


'மாஸ்டர்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியானது. 
 
அதேபோல் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழ் பேசும் ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி பேசும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
 
அதன்படி, கடந்த வாரம் படத்திற்கான பூஜை நடைபெற்றதுடன் இரண்டு நாள்களுக்கான படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறினர்.
 
இந்நிலையில், நசமீபத்தில், நடிகர் விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு சென்று திரும்பினார். படக்குழுவினர் ஏற்கெனவே சென்று அரங்கம் அமைக்கும் பணியை முடித்து விட்டனர். இந்த நிலையில், நடிகர் விஜய் ஜார்ஜியா சென்று சில காட்சிகளில் நடித்து முடித்துள்ளார் என்கிறார்கள். 
 
விஜய் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
அதாவது நடிகர் விஜய் நைட் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அந்த போட்டோவில் நடிகர்கள் மோகன் லால் மற்றும் மகத்துடன் உள்ளார் நடிகர் விஜய். ஜில்லா படத்தில் விஜயுடன் மோகன்லால் மற்றும் மஹத் நடித்திருந்தனர். அப்போது நடந்த நைட் பார்டியில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இது இருக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.

நைட் பார்ட்டியில் நடிகர் விஜய் - அதுவும் யார் கூடன்னு பாருங்க..! - திடீர் வைரலாகும் புகைப்படம்..! நைட் பார்ட்டியில் நடிகர் விஜய் - அதுவும் யார் கூடன்னு பாருங்க..! - திடீர் வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.