"ச்ச்சீ.. என்ன கன்றாவி இது..?.." - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!


விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவிற்கு தனி ரகிர்கள் பட்டாளமே உள்ளது. மூன்று சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போதும் அடுத்த சீசன் எப்போது தொடங்கப்படும் என அதன் ரசிகர்கள் ஆவலாக காத்து கிடக்கின்றனர். 
 
ஷோ ஹிட்டானதை விட அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் நல்ல ரீச் கிடைத்தது. முதல் சீசன் ஓவியா தொடங்கி கடந்த சீசன் ஆரி வரை அவர்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கிடைத்துள்ளது. 
 
இதில் கலந்துகொண்ட பின் பலருக்கு படவாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின. பிக் பாஸில் கலந்துகொண்டாலே புகழ் பெற்றுவிடலாம் என ஏராளமான பிரபலங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில், பிக் பாஸ் ஜோடிகள் என்ற பெயரில் பல பிக் பாஸ் பிரபலங்களை ஒன்றிணைத்து புது ஷோ விஜய் டிவியில் தொடங்க உள்ளது. அதில் குக்வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் புகழ் வனிதா, சாண்டி மாஸ்டர், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
 
 
சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் சோம் – ஷிவானி, ஆஜித் – கேபி, வனிதா – சம்யுக்தா – ஷாரிக், தாடி பாலாஜி – நிஷா ஆகியோர் ஜோடிகளாக பங்கேற்பது போல் இருந்தது. 
 
 
மேலும் சென்ராயன், மோகன் வைத்யா உள்ளிட்டவர்களும் அந்த ப்ரொமோவில் இடம் பெற்றிருந்தனர்.வனிதா தற்போது மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ள 'பிக்பாஸ் ஜோடி' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்த வந்துள்ளார். 
 

இந்த நிகழ்ச்சியில் மற்றவர்களை விட வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதற்காக, பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு இவர் ஆட்டம் போல சில போட்டோசை இவர் வெளியிட, நெட்டிசன்கள் செம்மையாக கலாய்த்து வருகிறார்கள்.

"ச்ச்சீ.. என்ன கன்றாவி இது..?.." - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! "ச்ச்சீ.. என்ன கன்றாவி இது..?.." - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.