"எப்படி இருந்த ரீமா சென்... இப்படி ஆகிட்டாங்களே.." - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..!

 
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரீமா சென், பெங்காலி, நேபாளி, போஜ்பூரி தியேட்டர் படங்களில் நடித்தார்.தமிழில் வெளியான ’மின்னலே’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.
 
அதன் பிறகு பகவதி, தூள், ஜே ஜே, எனக்கு 20 உனக்கு 18 ஆகியப் படங்களில் நடித்தார்.செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் ரீமா சென்னுக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
 
சிநேகா பிரிடோ இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.2012-ல் சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் ரீமா.
 
 
இவர்களுக்கு 2013-ல் ருத்ரவீர் சிங் என்ற மகன் பிறந்தார்.திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்காத ரீமா சென், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
 
 
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
 
 
8 வயது மகனுக்கு தாயாக இருக்கும் ரீமா சென்னின் குடும்பப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த ரீமா சென்.. இப்படி ஆகிட்டாங்களே என்று புலம்பி வருகிறார்கள்.

"எப்படி இருந்த ரீமா சென்... இப்படி ஆகிட்டாங்களே.." - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..! "எப்படி இருந்த ரீமா சென்... இப்படி ஆகிட்டாங்களே.." - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.