"தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை.." - சீரியல் நடிகை லதா ராவ் த்ரோ பேக் புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!

 
லதா ராவ் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். 
 
இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.
 
கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை லதா ராவ்.கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், லதா ராவ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான். 
 
 
சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சின்னத்திரை நடிகைகள் இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். அதன் காரணமாகத்தான் நான்கு மொழிகளிலும், சின்னத்திரையில் கலக்கி உள்ளார். மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார்.
 
 
பிரபல சின்னத்திரை நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்ட லதா ராவுக்கு லாரா மற்றும் ராகா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர்.வடிவேலுவுக்கு ஜோடியாக தில்லாலங்கடி படத்தில் காமெடி வேடத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர் லதா ராவ். 
 
 
அதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான சசிகுமார் இயக்கத்தில் ஈசன், சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 
 
சமீபத்தில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில் கிஷோர் ஜோடியாக நடித்து, குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய த்ரோபேக் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
 

இதனை பார்த்த ரசிகர்கள்,பல்வேறு விதமாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை.." - சீரியல் நடிகை லதா ராவ் த்ரோ பேக் புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! "தமிழ் சினிமா தவறவிட்ட செம்ம கட்டை.." - சீரியல் நடிகை லதா ராவ் த்ரோ பேக்  புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 13, 2021 Rating: 5
Powered by Blogger.