"இப்படி காட்டுவதற்கு மனசு வேணும்.. தாராள மனசு உங்களுக்கு.." - பதற வைக்கும் பார்வதி நாயர் ..! - வைரல் வீடியோ..!

 
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டிவரும் இவர், தற்போது கவர்ச்சி உடையில் ஜொலிக்கும் தனது அழகு ததும்பும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். 
 
இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . 
 
தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.அழகு தேவதை நடிகையாக வலம் வந்த பார்வதி நாயர் நீண்ட தேடலுக்கு பின் நடிப்புக்கு சவால் தரும் வகையில் உன் பார்வையில் படத்தில் நடித்து வருகிறார்.
 
அந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சகோதரியினை கொலை செய்யும் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வரும் இவர்,தற்போது தன்னுடைய பிரதான அழகு ததும்ப ததும்ப அப்படி இப்படி போஸ்கொடுத்து ஒருவீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காக வைத்துள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், எவ்வளவு அழகு இருந்தாலும், அதை இப்படி காட்டுவதற்கு மனசு வேணும்.. தாராள மனசு உங்களுக்கு என டபுள் மீனிங்கில் கருத்துக்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

"இப்படி காட்டுவதற்கு மனசு வேணும்.. தாராள மனசு உங்களுக்கு.." - பதற வைக்கும் பார்வதி நாயர் ..! - வைரல் வீடியோ..! "இப்படி காட்டுவதற்கு மனசு வேணும்.. தாராள மனசு உங்களுக்கு.." - பதற வைக்கும் பார்வதி நாயர் ..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 06, 2021 Rating: 5
Powered by Blogger.