"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே.." - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..!

 
வேட்டையாடு விளையாடுக்குப் பிறகு தமிழில் காணாமல் போன கமலினி முகர்ஜி மீண்டும் தமிழுக்கு வருகிறார். வங்கம் தந்த தங்கப் பெண்களில் கமலினியும் ஒருவர். 
 
கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் காணாமல் போனவர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்திய கமலினிக்கு தமிழ் சினிமா நல்லபடியாகத்தான் வரவேற்பு கொடுத்தது. 
 
2வது படமே அவருக்கு பிரிவோம் சந்திப்போம் என்ற வெயிட்டான படம் கிடைத்தது. ஆனாலும் திடீரென படத்திலிருந்து விலகிக் கொண்டார் கமலினி. சொன்ன கதை வேறு, படமாக்குவது வேறு என்ற புகாருடன் அப்படத்திலிருந்து வாக்கவுட் செய்தார் கமலினி.
 
இதையடுத்து தெலுங்குக்குப் போன கமலினி அங்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வரவே அங்கேயே செட்டிலானார். தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்நத கமலினிக்கு தமிழிலிருந்து சில வாய்ப்புகள் போகத்தான் செய்தன. 
 
ஆனாலும் தெலுங்கிலிருந்து வேறு எங்கும் போகாமல் அங்கேயே நிலை கொண்டிருந்தார் கமலினி. தமிழில் நடிப்பைக் காட்டிய கமலினி, தெலுங்கில் கிளாமரைக் காட்டினார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் நடிக்கப் போகிறாராம் கமலினி. இதை அவரே தெரிவித்துள்ளார். 
 
ஆனால் என்ன படம் என்பதை அவர் சொல்லவில்லை. விரைவில் என்னை தமிழில் பார்க்கலாம் என்று மட்டும் கூறியுள்ளார் கமலினி.சமீபத்தில், காதல்ன்னா சும்மா இல்ல, இறைவி படங்களிலும் நடித்திருக்கிறார். 
 
சேலை கட்டிகிட்டு நெத்தில பொட்டு வச்சிகிட்டு என்னங்கன்னு வந்து நிக்கற பொண்ணுன்னு நினைக்காதீங்க நான் கமாலினின்னு கபாலி ரஜினி ஸ்டைலில் டயலாக் பேசுவதுபோல் தனது தோற்றத்தை தற்போது அதிரடியாக மாற்றி வலம் வரத் தொடங்கி இருக்கிறார்.
 
கமலினி கையில் தாய் மொழியான பெங்காலியிலும் ஒரு படம் இருக்கிறதாம். தெலுங்கில் நிறையப் படங்கள் இருக்கிறதாம். நான் ரொம்ப பிசியாகி விட்டேன் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார் கமலினி. 

இந்நிலையில், கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

"குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே.." - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..! "குழந்தைங்க போடுற ட்ரெஸ்சை விட சின்னதா இருக்கே.." - உஷ்ணத்தை கூட்டும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமலினி..! Reviewed by Tamizhakam on June 14, 2021 Rating: 5
Powered by Blogger.