"இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?.." - அதுல்யா ரவி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருப்பவர். அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. 
 
இதன் பின்னர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய காதாப்பாத்திரத்தில் அதுல்யா நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் தான் அதுல்யாவிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என கூறலாம். 
 
சமீபத்தில், நடிகை அதுல்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தவிக்கவிட்டார்.
 
‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடித்து வரும் திரைப்படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. ஹீரோவாக ஒரு வெற்றி படமாவது கொடுத்து விட வேண்டும் என போராடி கொண்டிருப்பவர் நடிகர் சாந்தனு.
 
இந்த படத்தில் நடிகர் சாந்தனுவிற்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார்.இப்படத்தின் சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. 
 
ஆனால் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதன்பிறகு வட்டம் எனும் படத்திலும் நடித்துள்ளார். தற்போது கை வரிசையாக 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன.
 
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதுல்யா ரவி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 

 
அந்த வகையில், உடலை வில் போல வளைத்து யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பா..? இல்ல, ரப்பரா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

"இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?.." - அதுல்யா ரவி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இது உடம்பா..? இல்ல, ரப்பரா..?.." - அதுல்யா ரவி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 10, 2021 Rating: 5
Powered by Blogger.