விமர்சித்த ரசிகர்கள் - விளக்கம் கொடுத்த ப்ரியா பிரகாஷ் வாரியர்..!

 
வகுப்பறையில் சக மாணவனை பார்த்து கண்ணடித்ததன் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் படத்திற்காக அவர் கண்ணடித்தது பற்றி சமூக வலைதளங்கள், மீடியாக்கள் என்று எங்கு பார்த்தாலும் அவர் பேச்சாகத் தான் இருந்தது. 
 
ஆனால் ஒரு அடார் லவ் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.அந்த படத்திற்கு பிறகு ப்ரியா வாரியரின் கெரியரும் பெரிதாக பிக்கப் ஆகவில்லை. ரசிகர்களும் அடுத்த நடிகைகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பிவிட்டார்கள். 
 
இந்நிலையில் ப்ரியா வாரியர் போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ப்ரியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அவர் உடை. 
 
இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்னம்மா ப்ரியா இப்படி பண்றீங்களேமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் ப்ரியா வாரியரை பற்றி படுமோசமாக கமெண்ட் போட்டனர். 
 
மேலும் ப்ரியாவை பற்றி மீம்ஸ் போட்டும் கலாய்த்தனர். தன்னை பற்றி பலரும் கேவலமாக பேசுவதை பார்த்த ப்ரியா அவர்களுக்கு பதில் அளித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். மேலும் தன்னை விமர்சித்து போடப்பட்ட சில கமெண்ட்டுகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
என் லேட்டஸ்ட் போஸ்ட் தொடர்பாக வந்த கமெண்ட்டுகளில் சில இவை தான். என்னால் அந்த கமெண்ட்டுகளில் ஒரு பகுதியை கூட படிக்க முடியவில்லை. அதை இங்கே ஷேர் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
விமர்சித்த ரசிகர்கள் - விளக்கம் கொடுத்த ப்ரியா பிரகாஷ் வாரியர்..! விமர்சித்த ரசிகர்கள் - விளக்கம் கொடுத்த ப்ரியா பிரகாஷ் வாரியர்..! Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.