பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா - புது பெயர் இது தான்..!


தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தன் புகைப்படங்கள், கணவரும், நடிகருமான நாக சைதன்யாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்கள், ஒர்க்அவுட் வீடியோ, வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார்.
 
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, அதற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர், அவரை டுவிட்டரில் 89 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை சமந்தா, தனது சமூக வலைதள பக்கங்களில் திடீரென பெயரை மாற்றி உள்ளார்.
 


இதற்கு முன் சமந்தா அக்கினேனி என இருந்த நிலையில், தற்போது எஸ் (S) என மாற்றி உள்ளார். இருப்பினும் திடீர் பெயர் மாற்றத்துக்கான காரணத்தை நடிகை சமந்தா வெளியிடவில்லை. ஆனால், கணவரை விவாகரத்து செய்யப்போகிறார்.. அதனால் தான் பேரை மாற்றி விட்டார்.. என கண், காது.. மூக்கு வைத்து பேசி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா - புது பெயர் இது தான்..! பெயரை மாற்றிக்கொண்ட நடிகை சமந்தா - புது பெயர் இது தான்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.