"ஆம்.. எனக்கு அந்த பழக்கம் இருக்கு.." - ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கோலிவுட், டோலிவுட்டை போன்று அவரால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முடியவில்லை. இந்நிலையில் தான் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல் அகர்வால். 
 
உமா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் அனைத்து காட்சிகளும் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படமாக்கப்படவிருக்கிறதாம். உமா படத்திற்காக காஜலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். 
 
காஜல் முதல் முறையாக ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னதாக கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் நடித்தார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. 
 
இதையடுத்தே அவர் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
நடிகை காஜலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பர் கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்யும் காஜல், தனது கணவருடன் இரவு பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
இதனை தொடர்ந்து உங்களுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதா..? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க.. இல்லை என்று சொல்லாமல்.. இந்த கொரோனா காலத்தில் என்னுடைய லிவரை விட என்னுடைய கைகள் அதிக ஆல்கஹாலை சுவைத்துள்ளது என்று பதில் கொடுத்துள்ளார். 


இதன் மூலம், தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அம்மணி.

"ஆம்.. எனக்கு அந்த பழக்கம் இருக்கு.." - ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "ஆம்.. எனக்கு அந்த பழக்கம் இருக்கு.." - ஓப்பனாக ஒப்புக்கொண்ட காஜல் அகர்வால்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.