"இந்த வயசுலயும் இப்படியா..?.." - நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..!


அரண்மனை கிளி சீரியலில் கலக்கி வரும் நடிகை பிரகதியின் புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரகதி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார். 
 
மேலும் தமிழில் இவர், ஜெயம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் தற்போது அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். 
 
“ஒரு அம்மாவாக, சக்சஸ் தொழிலதிபராக, பத்துப் பேருக்கு முன்னால் பயப்படாமல் நிமிர்ந்து நிற்கும் கம்பீர பெண்மணியாக... இப்படி பல அவதாரங்கள் தாங்கிய கதாபாத்திரம்தான் நான் இப்போது நடிக்கும் ‘அரண்மனை கிளி’ மீனாட்சி பாத்திரம். 
 
எனக்குத் தெரிந்து சின்னத்திரையில் வேற யாரும் இப்படியொரு கேரக்டரை தொடவில்லை என நினைக்கிறேன்!’’ என்கிறார் பிரகதி. இந்நிலையில் தற்போது நடிகை பிரகதி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
நடிகை பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல்வேறு உடற்பயிற்சி மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். 
 

 
இதனிடையே தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள். .. இந்த வயசுலயும் இப்படியா...? என வாயை பிளந்து வருகின்றனர்.
"இந்த வயசுலயும் இப்படியா..?.." - நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா..?.." - நடிகை பிரகதி வெளியிட்ட வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 06, 2021 Rating: 5
Powered by Blogger.