"என்னங்க... இப்படி இருக்கீங்க..." - கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது. 
 
திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
 
தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
அத்துடன் ரக்ஷா பந்தன் நாளான இன்று ஜித்தின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கரில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பதையும் கீர்த்தி சுரேஷ் உறுதிபடுத்தியுள்ளார்.
 
 
இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்து வருகிறார்.
 
 
கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் குண்டாக மிகவும் அழகாக இருந்ததால் எளிதில் இவர்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல இடம் கிடைத்தது. 
 
ஆனால் இவர் தனது உடல் எடையை குறைத்தால் இவருக்கு என்று இருந்த ரசிகர்கள் பட்டாளம் குறைந்தது .அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.


தற்போது, சற்றே உடை எடை கூடியுள்ள அவர் ஓணம் ஸ்பெஷல் போட்டோ சூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்க இப்படி இருக்கீங்க.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.