"சினிமாவுல கூட இவ்ளோ குட்டியான ட்ரெஸ் போட்டது இல்லையே..." - திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

 
திருமணத்திற்கு பிறகும் துள்ளலான கவர்ச்சியுடன் காஜல் சோசியல் மீடியாவில் வலம் வருவதைக் கண்டு இளம் நடிகைகளே சற்று கடுப்பாகிவிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். 
 
விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார். சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ள காஜல் அகர்வால் கைவசம் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. 
 
மேலும் பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள காஜல் அகர்வால் கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். புள்ளிமான் போன்ற மெல்லிய ட்ரான்ஸ்பிரண்ட் ஆடையில் கிக்கேற்றி இருக்கும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
கொஞ்சம் கவர்ச்சியும், சொக்க வைக்கும் பார்வையும் சேர்ந்து காஜல் அகர்வால் ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதேபோல் கறுப்பு கலர் உடையில் தாராளமாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார் காஜல். 
 
கொசுவலை போன்ற ட்ரான்ஸ்பிரண்ட் உடைக்கு மேல் முட்டி வரை இருக்கும் கறுப்பு கலர் கோர்ட்டும், இடையை இறுக்கிப் பிடித்திருக்கும் பெல்ட் மற்றும் ஸ்டைலிஷ் தொப்பி அணிந்து ஹாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார்.

"சினிமாவுல கூட இவ்ளோ குட்டியான ட்ரெஸ் போட்டது இல்லையே..." - திணறடிக்கும் காஜல் அகர்வால்..! "சினிமாவுல கூட இவ்ளோ குட்டியான ட்ரெஸ் போட்டது இல்லையே..." - திணறடிக்கும் காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.