விஜய் செய்த சாதனைகளை சல்லி சல்லியா நொறுக்கிய அஜித் - வேற மாரி சம்பவம் செய்த தல ஃபேன்ஸ்..!


நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ள, இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணி எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட் கூட்டணியாக அமைந்துள்ளது என்பதால் ’வலிமை’ படத்தின் பாடல்களுக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 
 
சமீபத்தில், வெளியான ’வலிமை’ மோஷன் போஸ்டர் டீசரின் பிஜிஎம்மும் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது, ‘நாங்க வேற மாரி’ பாடல் வெளியாகி அஜித் -யுவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இந்த பாடல், இரவு நேரமாகவே இருந்தாலும் தல ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்துவிட்டனர். 
 
பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 4 லட்சம் பேரைக் கடந்த நிலையில், தற்போது 18 மணி நேர நிலவரப்படி விஜய் பாடல்கள் செய்த சாதனைகள் பலவற்றையும் தவிடு பொடியாக்கி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 
 
இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே உலகளவில் கடைசி 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த பாடல்கள் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தது.யூ-டியூப்பில் இந்த பாடலை 42 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து, சுமார் 7 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர். 
 
அதன் பின்னர் கடந்த ஆண்டு லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘குட்டி ஸ்டோரி’ பாடல் , 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகள் மற்றும் 1 மில்லியன் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்தது.
 

 
தற்போது அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய வலிமை பட ஃபர்ஸ்ட் சிங்கிள் 18 மணி நேரத்திலேயே 6.8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 933 K லைக்ஸ் உடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. 
 
மேலும் அஜித் திரையுலகில் அடியெடுத்து வைத்து 29 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, ட்விட்டரில் வேறு வலிமை கொண்டாட்டத்தை ரசிகர்கள் தூள் கிளப்பி வருகின்றனர்.
விஜய் செய்த சாதனைகளை சல்லி சல்லியா நொறுக்கிய அஜித் - வேற மாரி சம்பவம் செய்த தல ஃபேன்ஸ்..! விஜய் செய்த சாதனைகளை சல்லி சல்லியா நொறுக்கிய அஜித்  - வேற மாரி சம்பவம் செய்த தல ஃபேன்ஸ்..! Reviewed by Tamizhakam on August 03, 2021 Rating: 5
Powered by Blogger.