ஒரே நாளில் மோதும் வலிமை, பீஸ்ட் - பரபரக்கும் கோலிவுட்..! - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..!

 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 
 
இந்நிலையில் பீஸ்ட் படத்தினை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். 
 
கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல தயாராகி வருகின்றனர் படக்குழுவினர். 
 
 
இந்நிலையில் நவம்பர் மாதத்தில் பீஸ்ட் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் அதனை தொடர்ந்து பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்ற பிரபல திரையரங்க உரிமையாளரின் பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
நடிகர் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை வினோத் இயக்கி வருகிறார். 
 
இந்தப் படத்தில் இருந்து 'வேற மாரி' பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் பீஸ்ட் மற்றும் வலிமை என இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொள்ளும் தகவல் ரசிகர்கள் மத்தியில் காய்ச்சலை கிளப்பி விட்டுள்ளது.

ஒரே நாளில் மோதும் வலிமை, பீஸ்ட் - பரபரக்கும் கோலிவுட்..! - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..! ஒரே நாளில் மோதும் வலிமை, பீஸ்ட் - பரபரக்கும் கோலிவுட்..! - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..! Reviewed by Tamizhakam on August 24, 2021 Rating: 5
Powered by Blogger.