"காதலுக்காக மொட்டை.." - பலரும் அறிந்திடாத நடிகை சீதாவின் மறுபக்கம்..! - போட்டு உடைத்த இயக்குனர்..!

 
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவருடைய கற்பனை எல்லைக்கு அளவே கிடையாது. அப்படித்தான் சமீபத்தில் இவருடைய கற்பனையில் ஒரு துளியாக வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 
 
மேலும் உலகம் முழுவதும் பல விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. ஒரு மனிதன் இப்படி யோசிக்க முடியுமா என ஹாலிவுட் இயக்குனர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது ஒத்த செருப்பு திரைப்படம். அடுத்ததாக இரவின் நிழல் என்ற படத்தை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். 
 
பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் 2001 ஆம் ஆண்டே இருவரும் பிரிந்து தனித்தனியே சென்றுவிட்டனர். 
 
அதன் பிறகு சில வருடங்கள் தனியே வாழ்ந்து வந்த சீதா, கடந்த 2010ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆறு வருடங்கள் அவருடன் குடித்தனம் நடத்தினார். 
 
ஆனால் 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் பிறந்த மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதில் மகளுக்காக அந்த திருமணத்தில் பங்கேற்று கொண்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார். அதன்பிறகு பார்த்திபனுடன் சேர்ந்து வாழ சீதா விருப்பம் தெரிவித்ததாக ஒரு தகவல் உள்ளது. 
 
 
போனது போகட்டும், இருவரும் இனி வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழலாம் என கூறிய சீதாவிடம் பார்த்திபன், பிரிந்தது பிரிந்ததுதான், இனி ஒட்டி வாழ விருப்பமில்லை என ஒதுங்கி விட்டாராம். பார்த்திபன் மீது சந்தேகப்பட்டுத்தான் சீதா அவரை விவாகரத்து செய்ததாக பரவலான கருத்து கோலிவுட்டில் உள்ளது. 
 
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது.


இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட ரகசியத்தை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"காதலுக்காக மொட்டை.." - பலரும் அறிந்திடாத நடிகை சீதாவின் மறுபக்கம்..! - போட்டு உடைத்த இயக்குனர்..! "காதலுக்காக மொட்டை.." - பலரும் அறிந்திடாத நடிகை சீதாவின் மறுபக்கம்..! - போட்டு உடைத்த இயக்குனர்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.