"அடியே.. கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்..! - உருகும் ரசிகர்கள்..!

 
மெட்டி ஒலி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ரிதிகா. அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் படங்களிலும் நடித்து வருகிறார். மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் சீரியல் என்றாலே 90`s கிட்ஸ்க்கு ரொம்ப புடிக்கும்.இவர் இந்த சீரியல் மூலம் தான் தமிழ் சின்ன திரையுலகில் அறிமுகம் ஆனார்.
 
நாதஸ்வரம் தொடர் இவருக்கு மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். 
 
இவர் பல சீரியல்களில் நடித்துள்ளார்.மாமியார் தேவை,உறவுகள் சங்கமம் , முகூர்த்தம்,கோகுலத்தில் சீதை,கலசம் ,உயிர் போன்ற அணைத்து தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் சீரியல் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பே இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார்.
 
 
இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது கால்தடத்தை பதித்தவர்.இவர் 2008ஆம் ஆண்டு வெளியான மகேஷ்,சரண்யா மற்றும் பலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இதனை தொடர்ந்து இவருக்கு அதிக தமிழ் பட வாய்புகள் கிடைத்தனர். 
 
 
வெண்ணிலா கபடி குழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்புகள் குறைந்த நிலையில் தற்போது சின்ன திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்தள்ளார். 
 
 
பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் முகவட்டு கொண்டிருக்கும் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவர்ந்து வருகிறார்.

 
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடியே கொல்லுதே.. அழகோ அள்ளுதே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
"அடியே.. கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்..! - உருகும் ரசிகர்கள்..! "அடியே.. கொல்லுதே.. அழகோ அள்ளுதே.." - சீரியல் நடிகை கியூட் போட்டோஸ்..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.