"ஒருவேல அதுவா இருக்குமோ...?.." - சமந்தா செய்த வேலை.. - குழப்பத்தில் ரசிகர்கள்..!

 
திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். 
 
அத்துடன், நடிகை சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிரபலமாக வலம் வரும் நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, அதன் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். 
 
டோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிரபல குடும்பத்து மருமகளாகவே இருந்தாலும், சமந்தா சினிமாவை விட்டு விலகாமல் சரியான கதாபாத்திரங்களில் தூள் கிளப்பி வருகிறார்
 
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள தனது டிஸ்பிளே பெயரை நடிகை சமந்தா மாற்றி உள்ளார். தற்போது 'S'என்று மட்டுமே டிஸ்பிளே பெயர் உள்ளது. அதே சமயம் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து சமந்தா அக்கினேனி என்று தான் உள்ளது.
 
 
திடீரென டிஸ்பிளே பெயரை சமந்தா மாற்றியதற்கு எந்த காரணமும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் கணவருடன் கருத்து வேறுபாடு, கணவரை பிரியப் போகிறாரா சமந்தா, இதற்கு ஆரம்பமாக தான் தனது பெயரை மாற்றி உள்ளாரா, இல்லையெல் சமீபகாலமாக ஆன்மீகத்தில் தீவிரம் காட்டும் சமந்தா, நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றியுள்ளரா? என ரசிகர்கள் குழபப்தில் உள்ளனர்.
"ஒருவேல அதுவா இருக்குமோ...?.." - சமந்தா செய்த வேலை.. - குழப்பத்தில் ரசிகர்கள்..! "ஒருவேல அதுவா இருக்குமோ...?.." - சமந்தா செய்த வேலை.. - குழப்பத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.