"நாங்க வேற மாரி.." பாடலில் இதை கவனிச்சீங்களா...? - ஷாக் ஆன அஜீத் ரசிகர்கள்..!

 
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பின், நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் காம்பினேஷனில் உருவாகி வருகிறது ‘வலிமை’ திரைப்படம். இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். 
 
யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். வலிமை திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரசிகர்களின் ஒன்றரை வருட தொடர் வேண்டுகோளுக்குப் பிறகு கடந்த 17ம் தேதி 7 மணிக்கு மோஷன் போஸ்டர் மற்றும் சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டனர். 
 
இந்நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலை வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்திருந்தார். முதலில் இரவு 7 மணிக்கு பாடல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் 10.45 மணிக்கு பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. 
 
இந்நிலையில் சரியாக 10:45 மணிக்கு படக்குழு நாங்க வேற மாரி என தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இயக்குநர் விக்னேஷ்சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார். இதற்கு முன்னதாக 'என்னை அறிந்தால்' படத்தில் அவர் எழுதிய 'அதாரு அதாரு' சூப்பர் ஹிட் அடித்திருந்தது. 
 
இந்த பாடல் தான் படத்தின் ஓபனிங் சாங் என கூறப்படுகிறது. இதற்காக ஒடிஷாவில் இருந்து டிரம் கலைஞர்களை சென்னை வரவழைத்து லைவ் ரெகார்டிங் செய்திருக்கிறார் யுவன். 
 
பட்டையைக் கிளப்பும் இசையில் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். பாடல் மேக்கிங் வீடியோவில் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் மாஸ்க் அணிந்து கொண்டு கைகட்டியபடி நிற்பதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள்.
 
 
இதனை கண்டு ஷாக்கான சில அஜீத் ரசிகர்கள், பேசி அடிக்குரவங்கள பாத்திருக்கேன்.. சும்மா கையை கட்டிகிட்டே அடிக்குறியே மா.. வேற லெவல் சாங் மேக்கிங்.. என புகழாரம் பாடி வருகிறார்கள்.
"நாங்க வேற மாரி.." பாடலில் இதை கவனிச்சீங்களா...? - ஷாக் ஆன அஜீத் ரசிகர்கள்..! "நாங்க வேற மாரி.." பாடலில் இதை கவனிச்சீங்களா...? - ஷாக் ஆன அஜீத் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.