மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. எனவே, இவர் விரைவாக ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, விஜய், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீமாசென் நடித்திருந்தார்.
விஜய்யின் கில்லி பில்ம்ஸ் தயாரிக்கும் முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிதிருந்தார் ரீமா சென். இத்திரைப்படத்தினை எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவுப் பெண் சினேகா இயக்குகினார்.
நடிகை மீனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இந்நிலையில் ரீமா சென்னும் யூனிட்டில் இணைந்தார். ரீமா சென் விஜய்யுடன் படங்களில் நடித்திருக்கிறார். நட்பின் அடிப்படையில் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக விவரமறிந்த வட்டாரம் தெரிவித்தது.
இறுதியாக ரீமாசென் நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படம் வெளியாகியது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றியை கொடுக்கவில்லை.
எனவே, மீண்டும் அவர் சினிமாவை விட்டு விலகினார். இந்நிலையில், பருவ மொட்டாக கோலிவுட்டை சுற்றி திரிந்த இந்த பட்டாம்பூச்சி, தனது நண்பர்களுடன் பார்ட்டி ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.
0 கருத்துகள்