"பீஸ்ட்" வில்லன் இவர் தான்..? - கண்டிப்பா படத்தை தியேட்டர்ல தான் பாக்கணும் என கதறும் ரசிகர்கள்..!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். 
 
நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின்னர் சென்னையில் 2-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பாடல் ஒன்றும், சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. 
 
தற்போது சென்னையிலேயே 3-வது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு தவிர்த்து இதில் யாரெல்லாம் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே இருந்தது. 
 
தற்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 
 

சாணிக்காயிதம் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதன் மூலம் நடிகராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் செல்வராகவன். அந்தவிதமாக பீஸ்ட் படம் மூலம் ஒரு நடிகராகவும் செல்வராகவன் மிகப்பெரிய அளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கலாம். 
 
அநேகமாக படத்தில் அவர் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்தபடத்தில் செல்வராகவன் இணைந்ததை தொடர்ந்து படத்தை தியேட்டரில் தான் பார்ப்பது என்று பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.