"தொப்புள்-ல ஆம்லேட் போடுறது எல்லாம் பழசு.. இது தான் புதுசு.." - ஸ்ருதிஹாசன் பண்ண வேலையை பாருங்க..!


நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா இப்படி அனைவருடனும் நடித்துள்ளார்.இவர் பின்னணி பாடகியாகவும் பல பாடல்கள் பாடியுள்ளார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலுடன் வசித்து வருகிறார்.இவரின் காதலன் ஒரு டூடுல் கலைஞர்.
 
சில நாட்களுக்கு முன்பு தனது காதலன் வரைந்த புகைப்படங்களுக்கு மத்தியில் நடிகை ஸ்ருதி ஹாசன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.
 
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகி வருகிறது. அந்த வகையில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த க்ராக் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலைக் குவித்த நிலையில் அதைப் பின் தொடர்ந்து பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படமும் பல மடங்கு வசூலை வாரி குவித்தது.
 
எனவே தெலுங்கு நடிகர்கள் ஸ்ருதிஹாசனை தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டிருக்க இப்பொழுது பாகுபலி பிரபாஸ் உடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
கேஜிஎஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 படத்தை இயக்கி வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
 
படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில், தனது வயிற்றில் காதலன் சாந்தனு எழுதி பழகிய வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

 
அதில் ‘ THUG LIFE' என்று சாக் பீஸால் எழுதப்பட்டுள்ளது. தொப்புளில் ஆம்லேட் போடுறது எல்லாம் பழசு.. இது தான் புதுசு என அவரது ரசிகர்கள் கமெண்டி வருகிறார்கள்.
"தொப்புள்-ல ஆம்லேட் போடுறது எல்லாம் பழசு.. இது தான் புதுசு.." - ஸ்ருதிஹாசன் பண்ண வேலையை பாருங்க..! "தொப்புள்-ல ஆம்லேட் போடுறது எல்லாம் பழசு.. இது தான் புதுசு.." - ஸ்ருதிஹாசன் பண்ண வேலையை பாருங்க..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.