பிக்பாஸ் சீசன் 5 - வெளியானது முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல்..! - செம்ம கலாட்டா தான்..!


விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. நான்காவது சீசனின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது. 
 
நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி நிகழ்ச்சியை துவக்க முடியவில்லை. 
 
இருந்தாலும் பிக்பாஸ் பற்றிய எதிர்பார்ப்பை குறைய விடாமல் செய்வதற்காக கடந்த 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. 
 
நெட்டிசன்களும் வழக்கம் போல் தங்கள் பங்கிற்கு, பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் என அவ்வப்போது சில பெயர்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தனர்.சமீபத்தில் பிக்பாஸ் லோகோவை மாற்றி வெளியிட்டனர். 
 
அதைத் தொடர்ந்து அசத்தலாக அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்டு, நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளனர். அக்டோபர் 3 ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
இதனால் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள பெயர்கள் இது தான். 

01. பாபா பாஸ்கர்

 
02.ஜான் விஜய்

 
03.சந்தோஷ் பிரதாப்

 
04.கோபிநாத் ரவி 

 
05. டிக்டாக் ஜி.பி.முத்து 

 
06.சுனிதா

 

07.மிகா ஷகீலாவின் மகள்

 


ஆகியோரின் பெயர்கள் உள்ளன. ஆனால் இந்த பட்டியல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.


பிக்பாஸ் சீசன் 5 - வெளியானது முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல்..! - செம்ம கலாட்டா தான்..! பிக்பாஸ் சீசன் 5 - வெளியானது முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல்..! - செம்ம கலாட்டா தான்..! Reviewed by Tamizhakam on September 06, 2021 Rating: 5
Powered by Blogger.