நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம்.
விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா 2-ம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குக் வித் கோமாளி கனி,
- சுனிதா,
- பாபா பாஸ்கர்,
- சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய்,
- ரம்யா கிருஷ்ணன்,
- மைனா நந்தினி,
- ரச்சிதா மகாலக்ஷ்மி
- சாந்தினி
- ஷாலு ஷம்மு
- ஐஸ்வர்யா
- செய்தி வாசிப்பாளர் கண்மணி,
- எம்.எஸ்.பாஸ்கர்,
- லட்சுமி ராமகிருஷ்ணன்,
- டிக்டாக் ஜி.பி.முத்து
- ஷகீலாவின் மகள் மிகா
ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.