முதல் போட்டியாளராக பிக்பாஸ் 5 வீட்டில்.. யாரு இருக்காங்கன்னு பாருங்க.. - சும்மா அதிருதுல்ல..!

 
கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்திற்கான அறிமுக டீசர் பாணியில், இந்த ஐந்தாவது சீசனுக்கான டீசரிலும் 'ஆரம்பிக்கலாமா?' என்ற வசனம் இடம்பெற்றிருக்கிறது. 
 
மேலும், இந்த சீசனுக்கான பிக்பாஸ் 'ஐ லோகோ'வும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’தான். 
 
தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 'பிக்பாஸ் சீசன் 4' கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பானது. 
 
இந்த நிலையில், தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 
 

இந்நிலையில், டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் செட்டில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள, ஒருவேளை இருக்குமோ..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முதல் போட்டியாளராக பிக்பாஸ் 5 வீட்டில்.. யாரு இருக்காங்கன்னு பாருங்க.. - சும்மா அதிருதுல்ல..! முதல் போட்டியாளராக பிக்பாஸ் 5 வீட்டில்.. யாரு இருக்காங்கன்னு பாருங்க.. - சும்மா அதிருதுல்ல..! Reviewed by Tamizhakam on September 02, 2021 Rating: 5
Powered by Blogger.