தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர் - இவர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் - பட்டியல் இதோ..!

 
விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. 
 
மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
'மாஸ்டர் செஃப்', 'சர்வைவர்' என மற்ற சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகள் ஒருபுறம் என்றால், கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கமல் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் சீசன் என்பதால் ‘’என்ன பேசப் போகிறாரோ’’ என்கிற எதிர்பார்ப்பு இந்த சீசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்கிறது டிவி வட்டாரம். 
 
 
நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி நிகழ்ச்சியை துவக்க முடியவில்லை.
 
 
தற்போது வெளியே கசியந்துள்ள தகவலில் பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு போட்டியாளர்களை சேர்த்து மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவருமே 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு, தனிமை படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளனர்.அனைத்து போட்டியாளர்களின் பெயர்களும் தற்போது வெளியாகவில்லை என்றாலும் இதில் உறுதியாக கலந்து கொள்ளும் 9 பேர் யார் யார் என்பது வெளியே கசிந்துள்ளது. 
 
 
இதில் அனைவரும் எதிர்பார்க்கும் தொகுப்பாளினி பிரியங்கா யாரும் எதிர்பாராத நடிகையான பிரியாமணி, ஜெமினிகணேசன் அவர்களின் பேரன் அபிநய் ஆகியோர் அடங்கும்.


மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் சின்னத்தம்பி சீரியலில் நடித்த நடிகை பவானி ரெட்டி, பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கியுள்ள நிழல்கள் ரவி, பிரபல நடிகை ஷகிலாவின் மகளான மிளா, நடிகை பிரியங்கா, நடிகை யாஷிகாவின் ஆண் நண்பரும் மாடலுமான நிரூப் நந்தகுமார், மாடலிங் துறையில் கலக்கி வரும் அக்ஷரா ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
 
 
அதோடு சீசன் 4 ஐ விட இந்த சீசன் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக கவனமாக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். வழக்கம் போல் டிஆர்பி.,யை உச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தேர்வு, விதிகள், போட்டிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு அமைக்கப்பட்டு வருகிறதாம்.
தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர் - இவர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் - பட்டியல் இதோ..! தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர் - இவர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் - பட்டியல் இதோ..! Reviewed by Tamizhakam on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.