கேட்கக்கூடாத கேள்வி கேட்டவருக்கு... கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஆல்யா மானசா..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
 
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது. 
 
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் கணிசமாக குறைத்தார். 
 
பொதுவாக பிரபலங்களில் படிப்பு, வயது, சம்பளம் பற்றி எல்லாம் கேட்கவே கூடாது. கேட்டால் தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஆல்யா மானசா சமீபத்தில் தனது ரசிகர்களுடன் நடத்திய உரையாடலில், ரசிகர் ஒருவர், ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, “நான் உண்மையில் 12ம் வகுப்பு தான் முடித்துள்ளேன். 
 
 
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை” என கூறியுள்ளார். பொதுவாக பிரபலங்களிடம் யாராவது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டால், உனடியாக அவர்கள், நாம் குறைவாக படித்திருக்கிறோம் என்று தெரிந்தால் நம்மை குறைத்து மதிப்பிடுவார்களோ என்ற எண்ணத்தில், நான் எம்.ஏ படித்திருக்கிறேன், பி.எச்.டி ஆராய்ச்சி பண்றேன் என்று அடித்துவிடுவார்கள். 


ஆனால், ஆல்யா மானாசா அப்படியேல்லாம் பொய் சொல்லாமல் குறைவான படிப்பு என்றாலும் கூச்சப்படாமல், வெளிப்படையாக உண்மையை சொல்லியிருக்கிறார். ஆல்யா இப்படி உண்மையை சொல்லியைதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

கேட்கக்கூடாத கேள்வி கேட்டவருக்கு... கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஆல்யா மானசா..! கேட்கக்கூடாத கேள்வி கேட்டவருக்கு... கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஆல்யா மானசா..! Reviewed by Tamizhakam on September 21, 2021 Rating: 5
Powered by Blogger.