டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் பொத்தென விழுந்த அர்ச்சனா.. - பதறிய ரசிகர்கள்..!

 
பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா. அவர் ஜீ தமிழின் முக்கிய தொகுப்பாளராக இருந்த போது தான் பிக் பாஸ் வாய்ப்பு கடந்த வருடம் வந்தது. 
 
அதனால் அவர் ஜீ தமிழில் இருந்து வெளியேறி பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றார். பிக் பாஸுக்கு பிறகு அவர் விஜய் டிவியில் தான் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூளையில் ஒரு பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 
அதற்கு பிறகு அவர் வீட்டில் ஓய்வில் தான் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர்  யூ-ட்யூப் நேரலையில் பேசினார். அப்போது அவரை ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சி தொகுத்து வழங்க வரும்படி அழைத்து வருகின்றனர். 
 
அதற்கு பதில் கூறிய அர்ச்சனா தன் காலில் 16 தையல்கள் போடப்பட்டு இருக்கிறது என்றும், அதனால் தன்னால் நிற்கவே முடியாது எனவும் கூறி இருக்கிறார். . இவருடைய இந்த வீடியோவை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி கமெண்ட்களை போட்டு வந்தனர்.
 
 
சீக்கிரத்தில் எல்லாம் சரியாகி மீண்டும் நீங்கள் கம் பேக் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இவருடைய வீடியோ ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. 
 
அந்த வீடியோவில் அர்ச்சனா தன்னுடைய சகோதரியின் மகன் கட்டிலில் படுத்து இருக்க குழந்தையின் முன்பாக அர்ச்சனா அவருடைய மகள் மற்றும் அர்ச்சனாவின் சகோதரியும் டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். இவர்கள் ஆடிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனாவிற்கு தலையில் வலி வந்துவிடவே அவர் அப்படியே கட்டிலில் படுத்து விடுகிறார்.
 

இதைப் பார்த்ததும் இந்த மாதிரி நேரத்துல இது தேவையா உடம்பு நன்றாக சரி ஆகட்டும் அதற்கு பிறகு எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று பலர் உரிமையாக திட்டி வருகின்றனர். ரசிகர்களே இப்படி என்றால் நெட்டிசன்களை பற்றி கேட்கவே வேண்டாம், அவர்களும் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகின்றனர்.

டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் பொத்தென விழுந்த அர்ச்சனா.. - பதறிய ரசிகர்கள்..! டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் பொத்தென விழுந்த அர்ச்சனா.. - பதறிய ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 01, 2021 Rating: 5
Powered by Blogger.