"மெதுவா இழுங்க.. வாய் கிழிஞ்சுற போகுது.." - மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம்..! - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தொகுப்பாளராக அறிமுகமாகி சீரியலிலும் காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் மைனா நந்தினிக்கு யோகேஸ்வரன் என்பவருடன் திருமணம் முடிந்தது. இவர்கள் இருவரின் திருமணமும் காதல் திருமணம் என்றாலும் அனைவரும் இப்ப வரைக்கும் ஆச்சரியத்தோடு பார்க்கும்படி தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 
 
இதில் நந்தினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு வாழ்க்கையின் விரக்தியில் இருந்த இவர் மீண்டும் சீரியலில் காலடி எடுத்து வைத்த போது அவருடைய ரசிகர்கள் அவருக்கு பெரும் ஆதரவும் ஆறுதல் கொடுத்து வந்தனர்.
 
இந்த நிலையில்தான் நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த யோகேஸ்வரனுக்கு இவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் செய்திகள் வெளியாகி ஒரு சில நாட்களுக்குள்ளேயே இவர்களுக்குள் திருமணமும் நடைபெற்று விட்டது. 
 
 
இவருடைய திருமணத்திற்கு ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர். திருமணத்திற்கு பிறகு அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் டிக்டாக்வீடியோ களிலும் பிஸியாக இருந்துவந்தனர். தங்களுடைய அன்பை பல டிக் டாக் வீடியோக்களில் வெளிக்காட்டி வந்தனர்.
 
சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த காரணத்தால், மைனா நந்தினி என்று இன்றுவரை அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான Vlog வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். 


அந்த வரிசையில் சமீபத்தில் தங்களின் அவுட்டிங் காணொளியைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், வாயை பிடித்து ஈஈஈ என இழுத்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், மெதுவா இழுங்க வாய் கிழிஞ்சுற போகுது.. என்று கலாய்த்து வருகின்றனர்.

"மெதுவா இழுங்க.. வாய் கிழிஞ்சுற போகுது.." - மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம்..! - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! "மெதுவா இழுங்க.. வாய் கிழிஞ்சுற போகுது.." - மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம்..! - பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.