பிரியா வாரியர், ஸ்ரீ திவ்யா, மேகா ஆகாஷ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் எதாவது ஒரு ஹீரோயினை நமது ஃபேவரிட் ஹீரோயினாக்கி கொண்டு, அவரை உலகம் முழுவது கொண்டு போய் சேர்ப்பதற்காக உலகளவில் அவர்களை ட்ரெண்ட் செய்வது தமிழ் ரசிகர்களின் அன்பான வழக்கம்.
பிரியா வாரியர், ஸ்ரீ திவ்யா, மேகா ஆகாஷ் என இவர்கள் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நேரத்தில், ரசிகர்கள் அவர்களை சமூக வலைதளங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரெண்ட் செய்து தங்களைது அன்பையும், ஆதரவையும் தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
அதேபோல் ரசிகர்களின் தற்போதைய இதயத்தை திருடிய நடிகை அனு சித்தாரா. என்ன ஆச்சரியம் என்றால் இவர் நடித்தது ஒரேயொரு தமிழ் படம் “பொது நலன் கருதி” என்ற படம் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனாலும் அதில் மக்களிடம் பெரிதாக பெயர் கிடைக்கவில்லை.
மக்களின் அருளில், இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. போன வருடம் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போவாவது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு ஐஸ் கிரீம் போல் சில்லென்று ஆக்குவது வழக்கம்.
அதேபோல் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றன. டைட்டான நீல வண்ண டாப்ஸ் அணிந்துள்ள அவரது அழகு திமிருவது அழகுக்கு அழகூட்டுவதாக இருக்கின்றது.
ஆடைக்கு ஏற்றார் போல மேக்கப், சிகப்பு நிற உதட்டுச்சாயம் பார்பவரை மலைக்க வைக்கும் அளவுக்கு இருக்கின்றது. ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் ஆயாசமாக போஸ் கொடுத்து இளசுகளின் நெஞ்சை துளைதுள்ளார் அம்மணி.
0 கருத்துகள்