"வலிமை" டீசர் இப்படித்தான் இருக்கும் - இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்..!


அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் டீஸர் மற்றும் படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார். இந்தப் படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. 
 
ஆனால், 'அண்ணாத்த' படம் வெளியாகவுள்ளதால் அன்றைய தினத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். மேலும், படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என்று படக்குழுவினரிடம் விசாரித்தபோது தெரிவித்தார்கள். 
 
எந்தத் தேதியில் வெளியீடு என்பது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி செப்டம்பர் 25-ம்தேதிமாலை 6 மணிக்கு வலிமை டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 

இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் வலிமை டீசர் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், வலிமை டீசர் சம்பவம் தரமா இருக்கும், தல அஜித் இதுவரை பார்க்காத அஜித்தாக இருப்பார் என்று கூறி டீசர் மீதான ஹைப்பை எகிற வைத்துள்ளார்.

"வலிமை" டீசர் இப்படித்தான் இருக்கும் - இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்..! "வலிமை" டீசர் இப்படித்தான் இருக்கும் - இணையத்தில் வெளியான மாஸ் அப்டேட்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.