ஈஸ்வரி ராவ் ஆந்திர மாநிலம் பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரி ராவ் நடித்த முதல் தமிழ் படம் 1990 ரிலீஸுக்கு தயாரானது. ஆனால், அவருடைய துரதிர்ஷ்டம் அந்த திரைப்படம் கடைசி வரை திரையரங்குகளில் வெளியாகவில்லை.
அதன் பிறகு, விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில்தான் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டால், அப்பு, குட்டி, தவசி போன்ற ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ‘விரும்புகிறேன்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார். ‘சுள்ளான்’ படத்தில் தனுஷின் அக்காவாகவும், சிம்புவின் ‘சரவணா’ படத்தில் நடித்தார்.
அதன் பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கினார். பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் காலா திரைப்படத்தின் மூலம் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.
தான் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் வெற்றிபெறமுடியாமல் போனதற்கான காரணம் குறித்து மனம் திறந்த ஈஸ்வரிராவ், ‘‘தமிழ்மொழி, டான்ஸ், நடிப்பு என்று எதுவும் தெரியாமல், 17 வயதில் ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகம் ஆனேன். கதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன்.
ஆனால் என் கறுப்பு நிறமும் ஒல்லியான உடலமைப்பும் அதற்கு பெரிய தடையாக இருந்தன. நிறப்பாகுபாட்டால் ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது.
பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்களில் நடித்தேன். 2006 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. ‘காலா’ படம் தொடர்பாக ரஞ்சித், 2 மாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 3வது மாதம்தான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிப்பது உறுதியாச்சு.
என்னை அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணிப்பு பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. இந்த படத்தை தயாரிப்பதுடன், படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன்’ என்கிறார்.
இந்நிலையில், இவர் வயதில் டூ பீஸ் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது.
0 கருத்துகள்