மாடலிங் துறையில் இருந்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரைசா வில்சன். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரைசாவின் முகத்தில் பேசியல் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணுக்கு கீழ் வீங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது முகம் காயம்பட்டதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
மேலும் அதில் தனது அழகு கலை மருத்துவர் செய்த தவறால் இந்த விபரீதம் ஏற்பட்டிருந்ததாகவும், தற்போது அவர் வெளியூர் சென்றிருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் நான் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டேன் என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் ரைசா .
ஆனால் நெட்டிசன்கள் இந்தப் போஸ்ட் பார்த்து கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போதைய நிலைமையை விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் .அதுவும் முகத்தை அருகில் வைத்து எல்லாமே சரியாகிவிட்டது என போட்டோ வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்து ரசிகர்களும் கொஞ்சம் ஸ்வீட் ஷாக்காகி இருக்கின்றனர். இதுக்குதான் அந்த ஆர்ப்பாட்டமா என பலர் கமெண்ட் களில் கேட்டு வருகின்றனர். திரைப்படங்களில் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்த ரைசா மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு ஒரு நல்ல பிளாட்பாரம் கிடைத்துவிட்டது . இந்நிலையில், ரைசாவிடம் உங்க நாக்கை காட்டுங்க என்று கேட்ட ரசிகருக்கு ஒரு வீடியோவை அனுப்பி தன்னுடைய நாக்கை க்யூட்டாக காட்டியுள்ளார் அம்மணி.
0 கருத்துகள்