மல மல மல மருத மலை மல மருத மல…என்று குத்தாட்டம் போட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் நடிகை மும்தாஜ். இப்படி ஒரு ஆட்டமா என அசந்து போனார்கள் ரசிகர்கள். படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது. மும்தாஜ் என்ற வெண்கல சிலை போன்ற அழகு நடிகையை தமிழ்சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர்.
90 களில், பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகை என பெயர்பெற்றவர். தொடர்ந்து அவரது கட்டுக்கோப்பான உடல் அழகு மற்றும் அம்சமான முகம், உருளும் கண்கள் என ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்க்க அவரிடம் ஏகப்பட்ட அம்சங்கள் நிறைவாய் இருந்தன.
சத்யராஜூடன் மலபார் போலீஸ், லூட்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் உடன் குஷி படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவார். ரசிகர்களை பெரிதும் முணுமுணுக்க வைத்து ஆட்டம் போட வைத்த கட்டிப்புடி கட்டிப்புடிடா…கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா…என்ற மெகா ஹிட் பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது.
படம் வெளியான பின் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இவரை பலரும் கவர்ச்சி நடிகையாக பார்த்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருடைய எண்ணத்தையும் ஒரே அடியாக மற்றும் அளவிற்கு நடந்து கொண்டார் மும்தாஜ்.
உடுத்தும் உடைகள் பேசும் வார்த்தைகள் என அனைத்திலும் நிதானமும், பொறுமையும் காட்டியது... உண்மையில் கவர்ச்சி நடிகை மும்தாஜா என பலரை யோசிக்க வைத்து விட்டது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள மும்தாஜ், இனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் மற்றொரு ரவுண்டு வருவார் என பலரும் கூறினார்கள்.
'மோனிஷா என் மோனலிசா' என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தார்.
இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'ராஜாதி ராஜா' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் 'வளையம்' என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மோனிசா என் மோனாலிசா படத்தில் பிகினி உடையில் சிக்கென இருக்கும் தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டினார் அம்மணி. அந்த புகைப்படங்கள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மும்தாஜிற்கு வயது 18 தான் என்பது கூடுதல் தகவல்.