முதல் மனைவியுடன் ‘பழக’ போலீஸ் கேங்கை அனுப்பிய எஸ்.ஐ.. இதுவரை கேள்விப்பத்தாக கண்றாவி காவ(த)ல் கதை!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மும்தாஜ் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணைச் சுற்றி நடந்த பலகோண காதல் கதை, காவல்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம், காதல், திருமணம், ஏமாற்றுதல், மிரட்டல் என பல திருப்பங்களுடன் விசாரணை அதிகாரிகளை திணறடித்துள்ளது. முதல் கணவர் மரணம்: புதிய தொடக்கம் 2005ஆம் ஆண்டு மும்தாஜ், நாகர்கோவிலைச் சேர்ந்த முகமது ஜூபைரை திருமணம் செய்தார். ஆனால், 2011இல் மஸ்கட்டில் ஜூபைர் விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தனியாக வாழ்ந்து வந்த மும்தாஜ், பக்கத்து வீட்டில் வசித்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராமுடன் நட்பு ஏற்பட்டு, ஜமாத் மூலம் 2013இல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். மூன்றாவது திருமணம்: எஸ்ஐ ஜெயபாண்டியன் ராஜாராமுக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருந்ததாகவும், இதனால் மும்தாஜுடனான இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ராஜாராமுக்கு டிரைவராகப் பணியாற்றிய எஸ்ஐ ஜெயபாண்டியன், மும்தாஜுக்கு உதவிகள் செய்யத் தொடங்கி...