இந்த வயசுலயும் இப்படியா...? - ஜிம் உடையில் புன்னகையரசி சினேகா - மலைத்து போன ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார். 
 
தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
 
தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்யநாதன், தற்போது ‘ஷாட் பூட் 3’ என்ற படத்தை இயக்குகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். 
 
இப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
 
 
பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்.இப்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிய சினேகா கடைசியாக தனுஷ் இரட்டை வேடத்தில் கலக்கிய பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்து அனைவரையும் வியக்க வைத்து இருந்தார். 
 


 
இந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உடலை தயார் செய்து வருகிறார். அதற்காக இப்பொழுது ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.