வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்கிய ப்ரியா ஆனந்த்..!


தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். 
 
நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். 
 
ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை. 
 
தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.