தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது.
அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்த ஹன்சிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார்.
அப்படியும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சலித்து போன ஹன்சிகா, தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறினார். தனது புது லுக்கை பார்த்தாவது பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த ஹன்சிகா, விதவிதமான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைக்கிறார்.
நீண்ட நாட்களாக ரசிகர்கள் ஹன்சிகாவிடம் பிகினி போட்டோவை பகிரும் படி கோரிக்கைவிடுத்து வந்தனர். அதையும் பூர்த்தி செய்த ஹன்சிகா மகா பட ஷூட்டிங்கை முடித்த கையோடு மாலத்தீவிற்கு சென்று பிகினியில் ரக ரகமாய் போஸ் கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது டூ பீஸ் நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இன்னிக்கு எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே.. என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்