"ஆமா.. நீங்க எப்போ கர்ப்பமா இருந்தீங்க.." - கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..!


கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
 
சினிமாவையும் தாண்டி கமல் எங்கு சென்றாலும் பொதுவெளியில் கூட இந்த நடிகையின் இடுப்பை இறுகப்பிடித்தபடிதான் போஸ் கொடுப்பார். 18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். 
 
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். 
 

 
தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்பட்டது. 
 
நிலைமை இப்படியே போய்க்கொண்டிருக்க, திடீரென தனக்கு பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் தட்டி விட்டார். என்னடா இது..? நேத்து வரைக்கும் ஆண்டவர் கூட சுத்திட்டு இருந்தாங்க.. திடீர்ன்னு குழந்தையும் கையுமா போஸ் கொடுக்குறாங்க.. எப்போ கல்யாணம் பண்ணாங்க.. எப்போ கர்ப்பம் ஆனாங்க..? என்று அரசால் புரசலாக பேச்சுகள் எழுந்தன. 
 

இந்நிலையில், அந்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது தன்னுடைய பேபி பம்ப் தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

"ஆமா.. நீங்க எப்போ கர்ப்பமா இருந்தீங்க.." - கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..! "ஆமா.. நீங்க எப்போ கர்ப்பமா இருந்தீங்க.." - கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.