"கொடுத்து வச்ச ஜிம் மாஸ்டர்..." - டைட்டான ஜிம் உடையில் ஜிம் மாஸ்டரை தூக்கிய நிவேதா தாமஸ்..!


நடிகை, நிவேதா தாமஸ் தமிழ் திரைப்படத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
அதன் பின் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து பிரபலமானார். தற்போது இவர், சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து வருகிறார். 
 
இப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10 தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு 'பிங்க்' ரீமேக்கில் நடிக இருக்கிறார். 
 
தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இவரது இந்த முயற்சியையும், வளர்ச்சியையும் கண்டு பலரும் வியந்து பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் இன்னும் புகழின் உச்சிக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகிறார்கள். 
 
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தன்னுடைய உடல் எடை கூடி விடாமல் இருக்க உடற்பயிற்சியை விடாமல் செய்து வருகிறார். 
 

 
அந்த வகையில், தற்போது தன்னுடைய ஜிம் ட்ரெய்னரை அசால்டா தூக்கி விசும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கொடுத்து வச்ச ஜிம் ட்ரெய்னர் என்று கலாய்த்து வருகிறார்கள்.