அமைச்சரின் மகளுடன் ஆறு வருட காதல் - அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்ட காதலன்..!


கடந்த சில வாரங்களால அரசால் புரசலாக பேசப்பட்டு வந்த அமைச்சர் ஒருவரின் மகளின் காதல் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
 
சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ-வும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.சேகர் பாபு அவர்களின் மகளும் சென்னை ஒட்டேறியில் வசிக்கும் சதீஷ் என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 
 
இந்நிலையில், காதல் விவகாரம் அமைச்சரின் வீட்டில் புகைச்சலை கிளப்பவே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மும்பைக்கு அமைச்சரின் மகளுடன் ஓட்டம் பிடித்துள்ளார் சதீஷ். இதனை தொடர்ந்து அவரது ஆதார் எண்ணை கொண்டு ரயில் டிக்கட் புக் செய்த விவரங்களை கொண்டு அமைச்சரின் மகளை மீட்டுள்ளனர். 
 
தற்போது, காதலன் சதீஷ் என்னுடைய காதலியை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என்று அமைச்சரின் மகளுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். 
 
கிசுகிசு, வதந்தி என்று பேசப்பட்டு வந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
சாதி மறுப்பு திருமணத்திற்கு பல சலுகளைகளை வழங்கும் ஆளும் கட்சி இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகின்றது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். சதீஷ் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ,