சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட ‘ நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நீதானா அவன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தலும் “பண்ணையாரும் பத்மினியும், காகா முட்டை” போன்ற படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
எனக்கு சினிமா பின்னணி இல்லை. நடிகையான எனது பயணமும் சுலபமாக இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். எனது குடும்பம் சென்னை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தது. 8 வயதில் தந்தையை இழந்தேன்.
படிக்காத எனது அம்மா குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார். அம்மாவுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் மும்பை சென்று புடவைகள் வாங்கி வந்து கொஞ்சம் அதிக விலை வைத்து சென்னையில் விற்பனை செய்வார்.
எனக்கு பெரிய கனவு எதுவும் இல்லை. சினிமாவில் நடிகையாக முயற்சி செய்தபோது எத்தனை தடைகள் வருமோ அத்தனையும் வந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் என கூறியுள்ளார்.
சமீபத்தில், தமிழில் 'டிரைவர் ஜமுனா', 'மோகன் தாஸ்', 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'பூமிகா' திரைப்படம் ஓடிடியில் வெளியானது.இந்தப் படங்களைத் தொடர்ந்து அர்ஜுனுடன் இணைந்து புதிய த்ரில்லர் கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதில் அர்ஜுன் காவல்துறை விசாரணை அதிகாரியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியையாகவும் நடிக்கவுள்ளனர்.இந்நிலையில், டைட்டான உடையில், கால்களை விரித்து அமர்ந்தபடி போஸ்கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராஜேஷா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.
0 கருத்துகள்