தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் அனிதா சம்பத். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பழையபடி பிஸியான ஒருவராக மாறி விட்டார்.
தற்போது இவருடைய தோழி ஒருவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் அதற்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் மர்ம நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை அந்த பெண் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனிதாவுக்கு அனுப்ப அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அந்த மர்ம நபரின் முகத்திரையை கிழித்துள்ளார்.
அனிதா சம்பத்தின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Tags
Anitha Sambath