போனை பறிகொடுத்த நடிகர் விமல் - அதுவும் எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


களவாணி படம் மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விமல். அதன் பின் பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், சமீபகாலமாக கடன் விவகாரத்தில் சிக்க, இவர் நடித்த படங்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறது. 
 
இந்நிலையல் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த விமல், தன் விலையுர்ந்த மொபைல்போனை மேஜையில் வைத்து விட்டு, நொடிப்பொழுதில் ரசிகர்களுடன் செல்பி எடுத்து விட்டு திரும்புகையில் மொபைல் போன் மாயமாகி இருந்தது. 
 
இதுகுறித்து விமல் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் கொடுத்துள்ளார். ’களவாணி’, ’கலகலப்பு’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’தேசிங்கு ராஜா’ உள்பட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 
 
அதில், "கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது ரசிகர்கள் என்னுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது என்னுடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன். 
 
திரும்பி வந்து பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. இதன் பிறகு கடந்த 3 நாட்களாக தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறை என்னுடைய செல்போனை கண்டுபிடித்து தரும்படி கேட்டு கொள்கிறேன்" என்று புகாரில் நடிகர் விமல் தெரிவித்துள்ளார். 
 
களவாணியிடமே களவாண்ட்டு போயிட்டனுவளே..!

போனை பறிகொடுத்த நடிகர் விமல் - அதுவும் எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! போனை பறிகொடுத்த நடிகர் விமல் - அதுவும் எப்படின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on September 17, 2021 Rating: 5
Powered by Blogger.