"எப்போ கன்னித்தன்மை இழந்தீர்கள்.." என்று கேட்ட ரசிகருக்கு.. இலியானா கொடுத்த ஸ்லிப்பர் ஷாட் பதில்..!

 
தெலுங்கில் 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இலியானா. இதை தொடர்ந்து அதே ஆண்டு தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து, வெற்றி கிடைத்தது போல், தமிழில் கிடைக்கவில்லை. 
 
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய இவர், அடுத்தடுத்து பவன் கல்யாண், ரவி தேஜா, நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தார். 
 
தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவரை, மீண்டும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய... நண்பன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்க பட கூடிய நடிகையாக மாறினார். 
 
பின்னர் தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பபை பெற்றார். இவர் நடித்த படங்களுக்கும், அங்கு காட்டிய கவர்ச்சிக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. 
 
ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிபடங்களை ஏற்காமல் முழு பாலிவுட் நடிகையாக மாறினார். பாலிவுட் திரையுலகிற்கு சென்றது முதல், ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த இலியானா... அவ்வப்போது பிகினி உடை கவர்ச்சியிலும் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பது உண்டு. 
 
மேலும் காதல் தோல்வி, அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக அவதி பட்டுவந்ததாக கூறி வந்த படங்களின் வாய்ப்புகளை கூட ஏற்காமல் இருந்த இவர் மெல்ல மெல்ல, மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
 
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது, எப்போ நீங்க கன்னித்தன்மை இழந்தீர்கள்...என்று ஒரு ஆசாமி கேள்வி எழுப்பினார்.
 
 
இதற்கு பதிலளித்த இலியானா.. வாவ்.. இந்த கேள்விக்கு உங்கள் அம்மா என்ன பதில் சொல்லுவார்.. என்று சொருப்பால் அடித்தது போல பதிலடி கொடுத்துள்ளார்.