என்ன கன்றாவி இது..? - லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக பிக்பாஸ் ரேஷ்மா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரேஷ்மா. பிக் பாஸில் பங்கேற்கும் முன்பே அவர் மிக பிரபலமான நடிகை தான். அவரது புஷ்பா புருஷன் காமெடி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
பிக் பாஸ் சென்று வந்த பிறகு ரேஷ்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை. வாய்ப்பு தேடும் நடிகைகள் பொதுவாக செய்வது என்னவென்றால் அவர்களது அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது தான். 
 
அதே பார்முலாவை தான் தற்போது ரேஷ்மாவும் கையில் எடுத்திருக்கிறார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.ரசிகர்களின் மனதை அறிந்து ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுப்பதுதான் தனது முழு கடமை என ரசிகர்களின் மனதில் எப்படி எல்லாம் கவருவது என ரூம் போட்டு யோசித்து விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .
 
 
இவர் முதலில் வம்சம் சீரியல் அறிமுகமாகி அந்த சீரியல் மூலமாக தனக்கு கிடைத்த அங்கீகாரத்தை வைத்து திரைப்படங்களிலும் காலடி எடுத்து வைத்தார் .ஆனால் அவருக்கு ஒரு சில சீன்களில் வந்தாலும் பேரும் புகழும் வாங்கித் தந்தது வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படம் தான் .இந்த படத்தில் இவர் புஷ்பா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் அமர்ந்துவிட்டார். 
 
அதில் இவரும் சூரியும் ஜோடியாக நடித்திருப்பார் இந்த படத்தில் அனைவரும் சூரியை புஷ்பாவின் புருஷன் என கேட்டு கலாய்ப்பது கலாய்ப்பு இவரை ரொம்பவே பிரபலமாக்கி விட்டனர்.

 
இந்நிலையில், தற்போது லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா கன்றாவி காம்பினேஷன் இது...? என்று கலாய்த்து வருகிறார்கள்.

என்ன கன்றாவி இது..? - லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக பிக்பாஸ் ரேஷ்மா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! என்ன கன்றாவி இது..? - லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக பிக்பாஸ் ரேஷ்மா..! - கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 18, 2021 Rating: 5
Powered by Blogger.